கொரோனா காலத்தில் ஒரு பில்லியன் டாலர் வசூல் செய்த முதல் திரைப்படமானது "ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்"
கொரோனா பேரிடர் காலத்தில், ஒரு பில்லியன் டாலர்களை வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையை Spider-Man: No Way Home படைத்துள்ளது.
ஒமைக்ரான் பரவலுக்கு மத்தியில் கடந்த 16 ஆம் தேதி ரிலீஸ் ஆன Spider-Man திரைப்படம், சுவரஸ்யமான திரைக்கதை மற்றும் பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
உலகின் மிகப் பெரிய திரையரங்கு மார்கெட்டான சீனாவில் இத்திரைப்படம் ரிலீஸ் ஆகாத போதும், கடந்த 2 ஆண்டுகளில் எந்தப் படமும் ஈட்டாத வசூலை Spider-Man குவித்துள்ளது.
செப்டம்பரில் ரிலீஸான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான No Time to Die, 774 மில்லியன் டாலர்களை வசூல் செய்ததே, கொரோனா காலத்தில் ஹாலிவுட் படம் ஒன்றின் மிகப் பெரிய வசூலாகக் கருதப்பட்டது. தற்போது ரிலீஸாகி 2 வாரங்களுக்கு உள்ளாகவே ஒன்னு புள்ளி 05 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்து Spider-Man புதிய சாதனை படைத்துள்ளது.
Comments